ADDED : ஏப் 08, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, ரெட்டைபாளிவலசு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட்-6 பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் நித்யா, 17; தனியார் கல்லுாரி பி.எஸ்.சி., முதலாமாண்டு மாணவி.
தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மொபைல்போனில் யாருடனோ நித்யா அடிக்கடி பேசியதை, தாய் கண்டித்துள்ளார். இதனால் பிப்., மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரு நாட்கள் கழித்து வீடு திரும்பினார். மார்ச், 14ல் இதேபோல் மொபைலில் பேசியதை தாய் கண்டிக்கவே, வீட்டை விட்டு வெளியேறினார். இதுவரை வீடு திரும்பவில்லை. தாய் சித்ரா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

