சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு: பா.ஜ., வேட்-பாளர் உறுதி
சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு: பா.ஜ., வேட்-பாளர் உறுதி
ADDED : ஏப் 11, 2026 05:49 AM

ஈரோடு::ஈரோடு மேற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் எம்.யுவராஜா, வில்லரசம்பட்டி நால்ரோடு, நசியனுார், கங்காபுரம், சென்னிமலை ஒன்றிய பகுதிகளில், தாமரை சின்னத்துக்கு நேற்று ஓட்டு சேகரித்தார். கூட்டணி கட்சி நிர்வா-கிகளுடன், கடைவீதி, வீடுகளுக்கு சென்று தாமரை சின்னத்துக்கு ஓட்டுப்பதிவு செய்யும்படி கேட்டு அவர் பேசியதாவது:
ஈரோடு மாநகரம், ஈரோடு, சென்னிமலை ஒன்-றிய பகுதியில் அதிக அளவில் விவசாயமும், நெசவுத்தொழில் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நடந்து வருகிறது. இப்பகுதியின் பிரதான பிரச்-னையாக சாயக்கழிவு வெளியேற்றத்தை தடுக்க இயலாததாகும். இதனால் மாநில அளவில் கேன்சர் பிரச்னையை சந்திக்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொது கழிவு நீர் சுத்திக-ரிப்பு நிலையத்தை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவேன்.இதன் மூலம், நெசவு உட்பட ஜவுளி சார்ந்த தொழில் மேம்படும். ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தும் நிறைவேற்றாமல் உள்ளனர். அதை நிறைவேற்றுவதன் மூலம், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும். சாகுபடி பரப்பு அதிக-ரிக்கும். சட்டமன்ற உறுப்பினராக மக்கள், விவ-சாயிகள், நெசவாளர், மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து, அவர்களுக்-கான குறைகளுக்கு தீர்வு காண்பேன். கோரிக்கை-களை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுப்பேன். இவ்வாறு பேசினார். வேட்பாளருடன் அ.தி.மு.க., நிர்வாகிகள் கே.சி.பழனிசாமி, கோவிந்தராஜ் உட்-பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
