/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் பிளஸ் 2 வினாத்தாள் மையங்களின் எண்ணிக்கை குறைப்பு
/
மாவட்டத்தில் பிளஸ் 2 வினாத்தாள் மையங்களின் எண்ணிக்கை குறைப்பு
மாவட்டத்தில் பிளஸ் 2 வினாத்தாள் மையங்களின் எண்ணிக்கை குறைப்பு
மாவட்டத்தில் பிளஸ் 2 வினாத்தாள் மையங்களின் எண்ணிக்கை குறைப்பு
ADDED : பிப் 14, 2024 10:10 AM
ஈரோடு: பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் மையங்களின் எண்ணிக்கை, ஈரோடு மாவட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ல் துவங்கி 22ல் நிறைவு பெறுகிறது. கடந்த முறை வினாத்தாள் மையங்கள் எண்ணிக்கை ஏழாக இருந்தது. இதனால் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை தாமதமின்றி எடுத்து சென்றனர். ஆனால் இம்முறை வினாத்தாள் மையம் அமைப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்ததால், நான்கு மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித் துறையினர் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, மாவட்டத்தில் இந்தாண்டு, 109 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வினாத்தாள்கள் ஏழு இடங்களில் வைக்கப்பட்டு, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
ஆனால், இம்முறை வினாத்தாள் மையங்கள், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் கண்காணிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு அலுவலர்களை கண்காணிப்பு அலுவலராக நியமிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மூன்று மையங்கள் குறைக்கப்பட்டு, நான்கு வினாத்தாள் மையம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணிக்கு செல்லும் முதுகலை ஆசிரியர்கள், குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படுவர். முன்னதாக அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.

