/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்., சார்பில் நல்லிணக்க யாத்திரை
/
காங்., சார்பில் நல்லிணக்க யாத்திரை
ADDED : அக் 07, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: விஜயதசமியை ஒட்டி தமிழகம் முழுதும், ஆர்.எஸ்.எஸ். சார்பில், அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. இதற்கு போட்டியாக தாராபுரம் வடதாரையில், நேற்று காலை மாவட்ட காங்., தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில், நல்லிணக்க யாத்திரை நடந்தது.
சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி வழியாக சென்ற யாத்திரையில், 200க்கும் மேற்பட்ட காங்., தொண்டர்கள் பங்கேற்றனர். பழைய நகராட்சி அலுவலகம் முன் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்., தேசிய செயலர் சூரஜ் ஹெக்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காங்., கட்சி சாதனை மற்றும் தியாகங்கள் குறித்து பேசினார்.

