/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்; 107 பேர் கைது

ADDED : டிச 05, 2024 07:33 AM
ஈரோடு: வங்கதேச நாட்டில், ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 107 பேரை போலீசார் கைது செய்-தனர்.
வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழு சார்பில், நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என
அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன், இன்ஸ்-பெக்டர் செந்தில்பிரபு தலைமையிலான போலீசார் அவர்களை
தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 22 பெண்கள் உட்-பட, 107 பேரை போலீசார் கைது செய்தனர்.