/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தலைமையாசிரியர்கள் ஆய்வு கூட்டம் ரத்து
/
தலைமையாசிரியர்கள் ஆய்வு கூட்டம் ரத்து
ADDED : செப் 30, 2024 06:52 AM
ஈரோடு: ஈரோடு கல்வி மாவட்ட அளவில் அரசு, அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று (30ல்) திண்டல் யு.ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்வு விடுமுறையில், ஆய்வு கூட்டம் அறிவித்ததால் தலைமை ஆசிரியர்கள் விரக்தியடைந்தனர். இதுபற்றி நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், கூட்டம் நடக்கும் நாள் பின்னர் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்படும் என, ஈரோடு தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார் தெரிவித்துள்ளார். ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

