ADDED : பிப் 28, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
பி.பெ.அக்ரஹாரம் ஓங்காளியம்மன், விநாயகர், கன்னிமார் சுவாமி
கோவில்களின் நடப்பாண்டு விழா கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதலுடன்
தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள்
நேற்று தீர்த்தம் எடுத்து வந்தனர். முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம்
இன்று நடக்கிறது.
இதேபோல் பி.பெ.அக்ரஹாரம் பழைய மாரியம்மன்
கோவிலில், பொங்கல் விழா நேற்று நடந்தது. இன்று அம்மன் அழைத்தல், அம்மன்
திருவீதியுலா நடக்கிறது.
பி.பெ.அக்ரஹாரம் செல்வ விநாயகர்,
வாணியம்மன், முனியப்பன், செல்வ மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை
முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் நேற்று தீர்த்தம்
எடுத்து வந்தனர். அதன்பின் வாணியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும்
பொங்கல் வைத்தல் நடந்தது.

