/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிற்சங்க உரிமையை உறுதிப்படுத்த கோரி மறியல்; 75 பேர் கைது
/
தொழிற்சங்க உரிமையை உறுதிப்படுத்த கோரி மறியல்; 75 பேர் கைது
தொழிற்சங்க உரிமையை உறுதிப்படுத்த கோரி மறியல்; 75 பேர் கைது
தொழிற்சங்க உரிமையை உறுதிப்படுத்த கோரி மறியல்; 75 பேர் கைது
ADDED : அக் 02, 2024 01:44 AM
தொழிற்சங்க உரிமையை உறுதிப்படுத்த
கோரி மறியல்; 75 பேர் கைது
ஈரோடு, அக். 2-
ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பேரணியாக துவங்கி, கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த, இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் குவிந்தனர். தொழிற்சங்க உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தல். சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். தொழிற்சங்கத்தை ஏற்க மறுத்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படி போராட்டம் நடத்தும் தொழிலாளர்களையும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., தலைவர் களையும் கைது செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பேரணியாக புறப்பட முற்பட்டனர். அவர்களை தடுத்த போலீசார் கைது செய்வதாக தெரிவித்தனர்.
மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ரகுராமன், நிர்வாகிகள் முருகையா, பொன்பாரதி, ஜோதிமணி உட்பட, 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

