/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி மனு
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி மனு
ADDED : நவ 05, 2024 01:24 AM
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி மனு
கோபி, நவ. 5-
பெரிய கொடிவேரி அணை, அரக்கன்கோட்டை கரை பாசனதாரர் கிளை சங்கத்தினர், கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்திடம் நேற்று மனு கொடுத்தனர். மனு விபரம்:
அரக்கன்கோட்டை கரை பாசனங்களில், நெற்பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, ஏளூர் மற்றும் அரக்கன்கோட்டை பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும். தற்போது மழைக்காலமாக இருப்பதால், விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளது. நெல் கொள்முதல் நிலையம் துவங்குவதில், தாமதம் செய்தால், அவதிக்கு ஆளாக நேரிடும். சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.

