/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிருஷ்ணகிரி அரவை ஆலைகளுக்கு மாதம் 20,000 டன் நெல் ஒதுக்கீடு கோரி மனு
/
கிருஷ்ணகிரி அரவை ஆலைகளுக்கு மாதம் 20,000 டன் நெல் ஒதுக்கீடு கோரி மனு
கிருஷ்ணகிரி அரவை ஆலைகளுக்கு மாதம் 20,000 டன் நெல் ஒதுக்கீடு கோரி மனு
கிருஷ்ணகிரி அரவை ஆலைகளுக்கு மாதம் 20,000 டன் நெல் ஒதுக்கீடு கோரி மனு
ADDED : மார் 31, 2024 04:25 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரவை ஆலைகளுக்கு மாதம், 20,000 டன் நெல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, வலியுறுத்தி கலெக்டர் அலுவலத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட அரவை முகவர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 70 அரவை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த, 50 ஆண்டுகளாக நெல் அரவை செய்து வரும் எங்கள் ஆலைகளில், 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் பெறப்படும் நெல் ஒதுக்கீடு, தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், அரவை ஆலைகள் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. இதனால், ஆலை தொழிலாளர்கள், சுமைதுாக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், அவர்களது உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரவை ஆலைகளில், அரவை செய்து பெறப்படும் பச்சரிசி உற்பத்தியை நிறுத்திவிட்டு, இந்திய உணவு கழக கிடங்குகளிலுள்ள இருப்பு பச்சரிசியை, பொது வினியோக திட்டத்திற்கு வழங்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர், மாநிலங்களில் உள்ள ஆலைகளையும், முகவர்களையும் ஊக்குவித்து, பச்சரிசி தயார் செய்து, அதை தமிழ்நாட்டிலுள்ள இந்திய உணவு கழக கிடங்குகளில் இருப்பு வைத்து, வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட அரவை முகவர்கள், அதிக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இயந்திரங்களை இயக்க, 40 முதல், 50 ஹெச்.பி., வரை கூடுதலாக மின் இணைப்பு பெற்று, அதற்காக குறைந்தபட்ச கட்டணமாக மாதம், 30 முதல், 60,000 ரூபாய் வரை கூடுதலாக மின்கட்டணம் செலுத்த சிரமப்படுகிறோம். எனவே, மாவட்ட கலெக்டர் இப்பிரச்னை மீது கவனம் செலுத்தி, இம்மாவட்ட ஆலைகளுக்கு தேவையான மாதம், 20,000 டன் நெல்லை ஒதுக்கீடு பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

