/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ் மீது மோதிய லாரி காயமின்றி தப்பிய பயணிகள்
/
அரசு பஸ் மீது மோதிய லாரி காயமின்றி தப்பிய பயணிகள்
ADDED : டிச 13, 2024 01:09 AM
அரசு பஸ் மீது மோதிய லாரி
காயமின்றி தப்பிய பயணிகள்
புன்செய்புளியம்பட்டி, டிச. 13-
புன்செய்புளியம்பட்டியில் இருந்து பி-1 அரசு டவுன் பஸ், பவானிசாகர்-கொத்தமங்கலம் வழியாக பண்ணாரிக்கு நேற்று மாலை சென்றது. பள்ளி மாணவர்கள், பயணிகள் உட்பட, 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
பழைய கொத்தமங்கலம் நிறுத்தத்தில் பஸ் நிற்க, பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த ஈச்சர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்பகுதியில் மோதியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி
உடைந்தது.
லாரியின் முன்பக்கமும் சேதமானது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மகளிர் கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள்

