/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனி மார்க்கெட்டில் பழைய கடைகள் முழுமையாக அகற்றம்
/
கனி மார்க்கெட்டில் பழைய கடைகள் முழுமையாக அகற்றம்
ADDED : ஏப் 08, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தை பகுதியில், புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடை அமைத்திருந்த வியாபாரிகள், தங்களின் கடைகளை காலி செய்து, வணிக வளாகத்துக்குள் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காலியாக உள்ள பழைய கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அனைத்து கடைகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் அப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

