ADDED : நவ 27, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, இந்திய அரசியலமைப்பு நிறுவன நாளாகிய நவ.,26 தினத்தை கொண்டாடும் வகையில், ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா தலைமையில், மாவட்ட நீதிமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு முகப்புரையை, அதன் ஷரத்துக்களை உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நீதிமன்ற மேலாளர், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். நீதிபதி சமீனா, உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அனைத்து தாலுகா தலைமையகத்திலும் உள்ள நீதிமன்றங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

