ADDED : ஜன 13, 2026 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி, தாராபுரத்தை அடுத்த குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய இளைஞர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். குண்டடம் இன்ஸ்பெக்டர் விவேக் பங்கேற்றார். விவேகானந்தரின் வாழ்க்கை, இளைஞர்களுக்கு அவர் விடுத்த அறைகூவல் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்-கேற்றனர்.

