/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பருவமழையால் காய்ச்சல் பாதிப்பு உயர்வு
/
பருவமழையால் காய்ச்சல் பாதிப்பு உயர்வு
ADDED : நவ 14, 2024 07:31 AM
ஈரோடு: ஈரோட்டில் பருவமழை, பிற சூழலால் பெய்து வரும் மழை, காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு அதிகரித்து, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட தொல்லைகளுக்காக தினமும், 150 முதல், 200 பேருக்குள் வருவார்கள். தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்துள்-ளது.
இதுபற்றி டாக்டர்கள் கூறியதாவது: வழக்கத்தைவிட கூடுதலாக, 100 முதல், 120 பேர் வரை கடந்த சில நாட்களாக வருகின்றனர். பெரும்பாலும் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்ற கார-ணத்தால் வருகின்றனர். இது
சீசன் காய்ச்சல்தான் என்பதால், மாத்-திரை வழங்கி, 2 முதல், 3 நாளில் இயல்பு நிலைக்கு திரும்புகின்-றனர். தற்போதைய நிலையில் டெங்கு உட்பட பிற பாதிப்பு நபர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது வழக்கமான
அதிகரிப்-புதான். இன்னும் மழை, பனி அதிகரிக்கும்போது எண்ணிக்கை மேலும் உயரும். சீசன் காய்ச்சலுக்கு தேவையான மருந்து, மாத்-திரை தயாராக உள்ளது. உள்நோயாளியாக அனுமதித்தாலும், சிகிச்சை வழங்கும் வகையில்
முன்னேற்பாடு உள்ளது. காலை நேரத்தில் மட்டுமே அதிகமாக வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

