ADDED : மே 03, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தாயம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, 45; ஒன்றரை மாதங்களாக சென்னிமலை டவுன் ஐயப்பா நகரில், ஒரு மரம் அறுப்பு மில்லில் தொழிலாளியாக வேலை செய்தார். மில்லுக்கு லாரியில் வந்த வேப்ப மரங்களை இறக்கும் பணியில், செல்லத்துரை நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மேல் பகுதியில் இருந்து நிலைதடுமாறிவிழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பலியான செல்லத்துரைக்கு மனைவி, 17, 13 வயதில் இரு மகன்கள் உள்ளனர். விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
