sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நுாதன முறையில் 3 பவுன் செயின் பறித்தவருக்கு வலை

நுாதன முறையில் 3 பவுன் செயின் பறித்தவருக்கு வலை

நுாதன முறையில் 3 பவுன் செயின் பறித்தவருக்கு வலை


ADDED : மார் 26, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 01:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம், நுாதன முறையில் பேசிய மர்ம நபர், 3 பவுன் செயினை பறித்து சென்றார்.

தாராபுரம், வசந்தா ரோட்டில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் சரவணன், 43. இவரது தாயார் பழனியம்மாள், 68, நேற்று காலை 11:00 மணியளவில் குண்டடம் வடுகநாதசாமி கோவிலுக்கு செல்ல, பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த மர்ம நபர், கழுத்தில் இப்படி செயின் போட்டு கொண்டு செல்கிறீர்களே? அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டாமா என கேட்டு, 3 பவுன் செயினை வாங்கி பொட்டலம் போல மடித்து தந்ததாக கூறப்படுகிறது. ஆசாமி சென்ற பின், சந்-தேகத்தில் பொட்டலத்தை திறந்து பார்த்தபோது, அதில் கற்கள் இருந்ததால், அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள், அங்கேயே அமர்ந்து, அழுதார்.தாராபுரம் போலீசார், விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us