/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணினி சுழற்சி முறையில் இயந்திரங்கள் ஒதுக்கீடு
/
கணினி சுழற்சி முறையில் இயந்திரங்கள் ஒதுக்கீடு
ADDED : ஜன 14, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, கணினி சுழற்சி முறையில் முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்-மது
குதுரத்துல்லா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜ், கட்சி பிரதிநிதிகளாக காங்., விஜயபாஸ்கர், அ.தி.மு.க., சோழா லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

