/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளி கொலையில் ஆயுள் தண்டனை விதிப்பு
/
தொழிலாளி கொலையில் ஆயுள் தண்டனை விதிப்பு
ADDED : டிச 21, 2024 02:53 AM
தாராபுரம்: காங்கேயத்தை அடுத்த தம்மரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ், 55; இவரது மகள் சரண்யா, 22; அதே ஊரை சேர்ந்த குப்புசாமி மகன் தங்கராஜ், 28, என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
அதே பகுதியை சேர்ந்த நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளி குமாரசாமி, ௫௩, திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், 2014 ஏப்.,27ல் ஒரத்துப்பாளையம் அணை சாலையில் நுாறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த குமாரசாமியை கடப்பா-ரையால் தாக்கியதில் படுகாயமடைந்தார். கோவை மருத்துவம-னையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். காங்கேயம் போலீசார் நடராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி சரவணன் நேற்று தீர்ப்பளித்தார். நடராஜுக்கு ஆயுள் தண்டனை, 5,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தார். இதைய-டுத்து கோவை சிறையில் நடராஜ் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மணிவண்ணன் ஆஜரானார்.

