/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எல்.பி.பி., பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் துவக்கம்
/
எல்.பி.பி., பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் துவக்கம்
எல்.பி.பி., பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் துவக்கம்
எல்.பி.பி., பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் துவக்கம்
ADDED : அக் 10, 2024 03:10 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே, எல்.பி.பி., பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, எல்.பி.பி.,பாசனம் பெறும் பகுதி
களான நத்தக்காடையூர், மருதுறை, திட்டுப்பாறை, சிவியார்பா-ளையம், மரவபாளையம், திட்டம்
பாளையம், நத்தக்காட்டுவலசு பகுதிகளில் எல்.பி.பி., தண்-ணீரைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் நெல் நடவு செய்வது வழக்கம். 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்-தது.
தற்போது ஆட்கள் பற்றாக்குறை, நெல்லுக்கு போதிய விலை-யின்மை உள்ளிட்ட காரணங்களால் நெல் சாகுபடி பரப்பு கணிச-மாக குறைந்து, 2,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நடவு செய்து வருகின்றனர். பெரும்பாலும் நடப்பு சீசனில் ஆகஸ்டில் தண்ணீர் திறக்கப்பட்டு, அப்போதே நடவு பணிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும். நடப்பாண்டு தண்ணீர் திறக்கப்பட்டாலும், போதிய தண்ணீர் கிடைக்காமல் உள்ளதால் நடவுப் பணிகளும் தள்ளிப்போயுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆட்கள் பற்-றாக்குறை, தண்ணீர் பிரச்னை, நெல்லுக்கு போதிய விலை-யின்மை உள்ளிட்ட காரணங்களால், நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை தடுக்க நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

