/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போட்டோ ஸ்டூடியோவில் லேப்டாப், கேமரா திருட்டு
/
போட்டோ ஸ்டூடியோவில் லேப்டாப், கேமரா திருட்டு
ADDED : பிப் 28, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு,
மூலப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். கரூர் பைபாஸ் சாலை கார்மல்
பள்ளி எதிரே போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த, 25ம் தேதி இரவு
திருமண நிகழ்வுக்காக சென்றவர், 26ம் தேதி மதியம் ஸ்டூடியோவுக்கு
சென்றார்.
அப்போது முன்புற ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே
சென்று பார்த்த போது, 2 கேனன் கேமராக்கள், ஒரு லேப்டாப் திருட்டு போனது
தெரிந்தது. இவற்றின் மதிப்பு, 1.50 லட்சம் ருபாயாகும். தமிழ் செல்வன்
அளித்த புகாரின்படி சூரம்பட்டி போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா
பதிவை ஆராய்ந்தனர்.இதில் இருவர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

