ADDED : ஜன 06, 2026 08:08 AM

ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டியில் பா.ஜ., விவசாய அணி சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு நேற்று மாலை நடந்தது. இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். வில்லரசம்பட்டியில் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அங்கிருந்து மாட்டு வண்டியில் பட்டு வேட்டி, சட்டை அணிவித்து மாநாடு நடக்கும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு நடந்த பொங்கல் விழா, கோ-பூஜையில் பங்கேற்றார். பின்னர் மேடையில் நடந்த வள்ளி கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தார்.அவருடன் பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் ஆடினார். முன்னதாக மகளிர் மாநாட்டுக்கு வந்த, பா.ஜ., மாநில துணை தலைவர் குஷ்புவும், வள்ளி கும்மி நடனமாடிய கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடினார்.
முன்னதாக வில்லரசம்பட்டியில் விவசாய சங்க பிரதிநிதிகளின் இருவேறு கூட்டத்தில் பங்கேற்றார். பெண் விவசாயிகளுடன் மதிய உணவு சாப்பிட்டார். பிறகு மாலையில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
விழிப்புணர்வு மாநாட்டில் பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, மாவட்ட தலைவர் செந்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கருப்பணன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

