/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் விழுந்த இரும்பு தடுப்பு ஈரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் விழுந்த இரும்பு தடுப்பு ஈரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் விழுந்த இரும்பு தடுப்பு ஈரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் விழுந்த இரும்பு தடுப்பு ஈரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 24, 2024 01:36 AM
ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் முன்புறம், அதிக உயரத்தில் பாரங்களை ஏற்றிய கனரக வாகனங்கள் உள்ளே நுழைய முடியாதவாறு, இரும்பு தடுப்பு சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை அவ்வழியே வந்த, ஒரு மசாலா கம்பெனிக்கு சொந்தமான லாரி, இரும்பு தடுப்பில் மோதியது. இதில் இரும்பு தடுப்பு சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். பின் நெடுஞ்சாலை துறையினர், ரயில்வே அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்று விசாரணை நடத்தினர். கிரேன் மூலம் இரும்பு தடுப்பு அகற்றப்பட, போக்குவரத்து சீரானது.