தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முறையற்ற ஜெபக்-கூட்டம் நடவடிக்கை எதிர்பார்ப்பு

முறையற்ற ஜெபக்-கூட்டம் நடவடிக்கை எதிர்பார்ப்பு

முறையற்ற ஜெபக்-கூட்டம் நடவடிக்கை எதிர்பார்ப்பு


ADDED : செப் 08, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், சித்தோட்டை அடுத்த ஊத்துக்காடு குருசாமிபாளையத்தை சேர்ந்த சக்திவேல் தலைமையில் வந்த மக்கள் மனு அளித்தனர்.

மனு விபரம்: ஊத்துக்காடு பஸ் நிறுத்தம் அருகில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வரு-கிறோம். இப்பகுதியில் எந்தவொரு கிறிஸ்தவர்-களும் கிடையாது. ஆனால், வெளியூரிலிருந்து வரும் கிறிஸ்தவர்கள், தனியார் இடத்தை வாட-கைக்கு எடுத்து, எவ்வித அனுமதியின்றி ஜெபக்-கூட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் எங்கள் பகு-தியில் மதம் மாற்றும் நோக்கத்தோடு செயல்-பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சித்தோடு போலீசில் புகார் தெரி-வித்தோம். அங்கு வந்த போலீசார் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறி கிறிஸ்தவர்களை எச்சரித்து அனுப்-பினர். ஆனால் மீண்டும் கடந்த, 6ல் ஜெபக்-கூட்டம் நடத்த முயற்சித்தனர். அனுமதியின்றி ஜெபக்கூடம், கூட்டம் நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us