ADDED : நவ 03, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்;தாராபுரத்தில் கல்லறை திருநாளை ஒட்டி, நேற்று நடந்த திருப்பலியில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த முன்னோரை ஆண்டுதோறும் நவ., 2ம் தேதி வழிபடுகின்றனர்.
இதன்படி கல்லறை திருநாளான நேற்று, தாராபுரத்தில் ஐந்து சாலை சந்திப்பு அருகேயுள்ள கல்லறை தோட்டத்தில், திருப்பலி மற்றும் மந்திரிப்பு நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மூதாதையர் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். பங்குத்தந்தை ஜார்ஜ் தனசேகர் பங்கேற்றார்.

