sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அறிவுசார் மையத்துக்காக வீணாக்கப்படும் அரசு நிதி

/

அறிவுசார் மையத்துக்காக வீணாக்கப்படும் அரசு நிதி

அறிவுசார் மையத்துக்காக வீணாக்கப்படும் அரசு நிதி

அறிவுசார் மையத்துக்காக வீணாக்கப்படும் அரசு நிதி


ADDED : ஜன 16, 2026 04:28 AM

Google News

ADDED : ஜன 16, 2026 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தில் அறிவுசார் மையம் அமைக்க, பழைய நகராட்சி கட்டடம் இருந்தும், வேறு பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்-ளது. இதனால் அரசு நிதி வீணாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. நகராட்சி நிர்வாக அலுவலக கட்டடம் பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டில் இயங்கியது. இடப்பற்றாக்குறையால் சென்னிமலை ரோட்டில் புதிய கட்-டடம் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது. பழைய கட்-டடத்தை அறிவுசார் மையமாக மாற்ற கோரிக்கை எழுந்தது. நடவ-டிக்கை எடுக்கப்படாததால் பொருட்கள் வைக்கும் வைப்பறை-யாக பயன்படுத்தப்பட்டு

வருகிறது.

இந்நிலையில் கடந்த, 2ம் தேதி பாப்பினி அருகே பச்சாபாளை-யத்தில், தாட்கோ மூலம், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. சரியான போக்கு

வரத்து வசதிகள் இல்லாத இந்த பகுதியில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டால் மாணவர்கள் பயன்படுத்த

முடியாத சூழல் ஏற்படும். அரசு நிதியும் வீணாகும்.

ஏற்கனவே பயன்படுத்தப்படாமல் உள்ள சட்டமன்ற அலுவ-லகம், பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இருந்தும் சந்தை வளாகத்தில் நுாலகம் கட்டப்பட்டதால், பயன்

படுத்த முடியாத சூழல் உள்ளது. இதேபோல் அறிவுசார் மையத்-தையும், பயன்படுத்த முடியாமல் போகுமோ? என்ற கவலை, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி மக்கள் கூறியதாவது: காங்கேயம் நக-ராட்சி பழைய அலுவலகத்தில் அறிவுசார் மையம் அமைக்கப்-பட்டால் காங்கேயம், வெள்ளகோவில், முத்துார், ஊதியூர், சென்-னிமலை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஏதுவாக இருக்கும். இதனால் திருப்பூர், கோவை, ஈரோடு சென்று படிப்பதைவிட உள்-ளூரிலேயே பயிற்சி வகுப்பு, பயிற்சி தயாரிப்புகளை மேற்-கொள்ள முடியும். ஆனால் போக்குவரத்து வசதி இல்லாத பகு-தியில் அறிவுசார் மையம் அமைப்பதால் முழு பயன் கிடைக்-காமல் போகும். எந்த ஆய்வும் இல்லாமல் அவசர கதியில் அடிக்கல் நாட்டியுள்ளனர். நகராட்சியின் பழைய அலுவலக கட்-டடத்தை, அறிவுசார் மையமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us