/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.62 கோடி மோசடி 'மாஜி' ராணுவ வீரர் கைது
/
ரூ.62 கோடி மோசடி 'மாஜி' ராணுவ வீரர் கைது
ADDED : டிச 12, 2024 02:00 AM
ஈரோடு,:ஈரோடு முனிசிபல் காலனியில், யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ், நசியனுார் சாலையில் செயல்பட்ட ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் நவீன்குமார், 38, பங்குதாரர் முன்னாள் ராணுவ வீரர் முத்துச்செல்வன், 48.
நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1.80 லட்சம், 5 லட்சம் ரூபாய்க்கு 7.5 லட்சம், 10 லட்சத்திற்கு, 15 லட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இதை நம்பி, முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனர். வட்டி, அசல் தொகையை வழங்காமல், நிறுவனத்தை பூட்டி சென்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். போலீசார், 2023 நவ., 23ல் துபாய் தப்ப முயன்ற நவீன்குமாரை, சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கடந்த மாதம் வரை இரண்டு நிறுவனங்களிலும், 62 கோடி ரூபாய் வரை முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்டதாக, 345 பேர் புகார் அளித்துள்ளனர். முத்துச்செல்வனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேலத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

