/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் குழாய்களை கண்காணிக்க கேமரா பொருத்திய விவசாயிகள்
/
தண்ணீர் குழாய்களை கண்காணிக்க கேமரா பொருத்திய விவசாயிகள்
தண்ணீர் குழாய்களை கண்காணிக்க கேமரா பொருத்திய விவசாயிகள்
தண்ணீர் குழாய்களை கண்காணிக்க கேமரா பொருத்திய விவசாயிகள்
ADDED : ஜூலை 15, 2025 01:10 AM
டி.என்.பாளையம், விவசாயிகள் சிலர் ஒன்று சேர்ந்து, டி.என்.பாளையத்தை அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை அருகே, தனியார் இடத்தில் போர்வெல் அமைத்துள்ளனர். அங்கிருந்து குழாய்கள் மூலம், ௫ கி.மீ., துாரத்தில் உள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர். மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுடன் குழாய் பொருத்தினர். தற்போது குழாய் வழியாக தண்ணீரும் செல்கிறது. இந்நிலையில் தண்ணீர் செல்லும் குழாய், ஒரு சில இடங்களில் சேதம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கருதிய தனியார் விவசாயிகள், குழாயை கண்காணிக்கும் வகையில், வினோபா நகர் பகுதியில் நேற்று கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு எஸ்.பி., சுஜாதா தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். தற்போது மூன்று கேமரா பொருத்தியுள்ளதாக தெரிகிறது.