/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் கடைக்கு 'சீல்' 14 கிலோ குட்கா பறிமுதல்
/
ஈரோட்டில் கடைக்கு 'சீல்' 14 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : மார் 09, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கிழக்கு கொங்காலம்மன் கோவில் வீதியில், மகாசிவசக்தி ஸ்டோர்ஸ் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேசுக்கு தகவல்
கிடைத்தது.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், செல்வம், அருண், டவுன் போலீசார் ஆய்வு செய்தனர். கடையில், 14 கிலோ எடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த ரகுவீர் சிங்கை கைது செய்தனர். உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடைக்கு 'சீல்' வைத்து, 50,000 ரூபாய் அபராதம்
விதித்தனர்.

