/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெற்றோரை தாக்கிய 'பாசக்கார' மகன் கைது
/
பெற்றோரை தாக்கிய 'பாசக்கார' மகன் கைது
ADDED : ஜன 23, 2026 04:41 AM
ஈரோடு: ஈரோடு பெரிய சேமூர் பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பொன்-னையா, 72; இவர் மனைவி பழனியம்மாள். தம்பதியரின் மகன்கள் ராமமூர்த்தி, வடிவேல், 42; அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். மதுரை வாடிபட்டி பாலமேடு கிழக்கு வீதியில் வடிவேல் தற்போது வசிக்கிறார். பொன்னையா-வுக்கு மதுரையில் ஏழு ஏக்கர் தோட்டம், 3 காலி பிளாட் உள்ளது.
ஒரு பிளாட்டை மகன் ராமமூர்த்திக்கு, 20 நாட்களுக்கு முன் கிரயம் செய்து கொடுத்தார். இதுபற்றி வடிவேல் கடந்த, 10 நாட்-களாக பொன்னையாவிடம் போனில் தகராறு செய்துள்ளார். கடந்த, 21ல் ஈரோட்டில் வீட்டுக்கு வந்தவர், தந்தையிடம் தக-ராறு செய்துள்ளார். அப்போது தகாத வார்த்தை பேசி, கம்பி மற்றும் மர கட்டையால், பெற்றோரை தாக்கியுள்ளார். இதை தடுத்த சகோதரர் ராமமூர்த்தி, அவரது மகனையும் சிறு கத்தியால் கீறியுள்ளார். பொன்னையா அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து வடிவேலை கைது செய்-தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில்
அடைத்தனர்.

