sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி போலீசார் வழக்குப்பதிவால் தலைமறைவு

/

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி போலீசார் வழக்குப்பதிவால் தலைமறைவு

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி போலீசார் வழக்குப்பதிவால் தலைமறைவு

சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி போலீசார் வழக்குப்பதிவால் தலைமறைவு


ADDED : ஜூலை 27, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகியை, போலீசார் தேடி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளை-யத்தில், சூதாட்ட கிளப் நடப்பதாக வந்த தகவலின்படி சித்தோடு போலீசார் சோதனை நடத்தினர்.ஒரு கிளப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 21, பெலிக்ஸ், 40, முகிலன், 22; சேலம் மாவட்டம் சங்ககிரி, கல்வ-டங்கம் கார்த்திக், 35; துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் புதுப்படி சிவக்குமார், 55; திருப்பூர் மாவட்டம் காங்கேயம் செந்-தில்குமார், 47; ஈரோடு, வீரப்பன்சத்திரம் அப்துல் சலாம், 61; நாமக்கல் மாவட்டம் முருக செல்லபெருமாள் என எட்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்த-போது, முருக செல்லபெருமாள் தப்பி ஓடி விட்டார்.போலீஸ் விசாரணையில், 'காலிங்கராயன் மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதும், தி.மு.க.,வை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலாளர் குமாரவடிவேல் என்பவ-ருக்கு, கிளப் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். குமாரவடிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரவடிவேல், முருக செல்லபெருமாளை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us