/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை அமோகம்
/
ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை அமோகம்
ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை அமோகம்
ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை அமோகம்
ADDED : அக் 28, 2024 03:54 AM
ஈரோடு: ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி, ஜவுளி விற்பனையின் ஒருங்கி-ணைந்த வளாகமாக உள்ளது. இங்கு தினசரி, வாராந்திர சந்தை இயங்கி வருகின்றன. 500 கடைகள் இயங்கும் ஒரே வளாக-மாகும்.
இங்கு தீபாவளி விற்பனை கொண்டாட்டம் 'பிக் தீபாவளி பிக் டெக்ஸ்வேலி' என்ற பெயரில், 1,000க்கும் மேற்பட்ட கடை-களில் புதிய ரக ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு துணிகள் எடுக்கும் அனைவருக்கும் அக்.,31ம் தேதி கூப்பன் வழங்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்கு, 10 பேர் என்ற அடிப்படையில் பரிசு வழங்கப்படும். மொத்த பரிசு மதிப்பு, ரூ.10 லட்சம் ஆகும். 999 ரூபாய்-க்கு மேல் பொருட்கள் வாங்குப-வர்களுக்கு சுலோகன் எழுதும் போட்டி நடத்தப்பட்டு மெகா பரிசு வழங்கப்படும்.
டெக்ஸ்வேலிக்கு ஈரோடு பஸ் நிலையம், ரயில் நிலையம், சித்-தோடு, கவுந்தப்பாடி, பெருந்துறை பகுதிகளில் இருந்து இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. இத்தகவலை டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் தேவராஜன், நிர்வாக இயக்குனர் ராஜசேகர், டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் குமார், இயக்குனர் உமா ராஜசேகர் தெரிவித்தனர்.

