/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரபட்சமான அணுகுமுறை' டாஸ்மாக் ஊழியர்கள் குமுறல்
/
பாரபட்சமான அணுகுமுறை' டாஸ்மாக் ஊழியர்கள் குமுறல்
ADDED : டிச 10, 2024 02:03 AM
ஈரோடு, டிச. 10-
ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், 193 டாஸ்மாக் கடைகளில், 1,050 பேர் பணி செய்கின்றனர். 70 மதுபான கூடங்கள் மட்டும் செயல்படுகிறது. கடந்த, 2002ல், 1,500 என்ற அளவில் இருந்த ஊழியர் எண்ணிக்கை, 1,050 ஆக குறைந்துள்ளது.
பல கால கட்டங்களில் விற்பனை நேரம் மாற்றியும், வார ஓய்வு, தேசிய பண்டிகை விடுப்பு கூட வழங்காத நிலை உள்ளது. நீதிமன்ற தலையீட்டால், 8 நாட்கள் கடை அடைக்கப்படுகிறது.
தொகுப்பூதிய அடிப்படையில் மேற்பார்வையாளர்கள், 14,850 ரூபாய், விற்பனையாளர்கள், 12,530 ரூபாய், உதவியாளர்கள், 11,340 ரூபாய் ஊதியம் பெறுகின்றனர்.
ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., திட்டத்தை அமலாக்க வேண்டும். வைப்பு நிதி திட்ட இருப்பு விபரத்தை, ஆண்டுக்கு ஒரு முறை எழுத்து பூர்வமாக தர வேண்டும்.
குடும்ப மருத்துவ திட்டம் என சேமநல நிதி பிடித்தம் செய்தும் பயனின்றி உள்ளது. பயனுடையதாக மாற்ற வேண்டும்.
காலி பாட்டில்களை திரும்ப பெற, ஒப்பந்ததாரர்களை நியமித்து பெற வேண்டும். பாரபட்சம் இன்றி ஊழியர்களை நிர்வாகம் நடத்த வேண்டும். அவர்களுக்கு உரிய இடத்தில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

