/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கறிக்குழம்பு வைக்காத மனைவிக்கு வெட்டு: குடிபோதை கணவன் சிறையிலடைப்பு
/
கறிக்குழம்பு வைக்காத மனைவிக்கு வெட்டு: குடிபோதை கணவன் சிறையிலடைப்பு
கறிக்குழம்பு வைக்காத மனைவிக்கு வெட்டு: குடிபோதை கணவன் சிறையிலடைப்பு
கறிக்குழம்பு வைக்காத மனைவிக்கு வெட்டு: குடிபோதை கணவன் சிறையிலடைப்பு
ADDED : பிப் 20, 2024 10:32 AM
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த நல்லபாழியை சேர்ந்தவர் கருப்புசாமி, 50; இவரது மனைவி சாரதா, 45; இருவரும் கட்டட தொழிலாளர்கள். தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுடன் தம்பதியர் வசிக்கின்றனர். மகன் அதே சென்னிமலை அருகே பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கருப்புசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணிக்கு போதையில் வீட்டுக்கு வந்தார். மனைவியிடம் சாப்பாடு கேட்டவர், என்ன குழம்பு என்று கேட்டுள்ளார். சாம்பார் வைத்துள்ளதாக சாரதா கூறினார். இறைச்சி எடுக்கவில்லையா? என்று கேட்டு தகராறு செய்தவர், முட்டையாவது சமைத்துக் கொடு என்று கூறியுள்ளார். வீட்டில் கரண்ட் இல்லை; இரவில் விறகு அடுப்பில் முட்டை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கருப்புசாமி, அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். அவர் விலகவே தலையின் வலதுபுறத்தில் வெட்டு விழுந்தது. இதை மகன் கண்டிக்க, அவரையும் வெட்டினார். இதில் இடது புறம் வெட்டு விழுந்து அவர் கூக்குரலிட்டார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சாரதா நேற்று காலை கொடுத்த புகாரின்படி, சென்னிமலை போலீசார் கருப்புசாமியை கைது செய்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

