தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கிரைம் செய்திகள்: ஈரோடு

கிரைம் செய்திகள்: ஈரோடு

கிரைம் செய்திகள்: ஈரோடு


UPDATED : அக் 27, 2026 07:40 AM

ADDED : அக் 27, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:40 AM ADDED : அக் 27, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செவிலியர் திடீர் மரணம்

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த நத்தக்கடையூர், இச்சி-காட்டுவலசை சேர்ந்த கண்ணுசாமி மனைவி ராதிகா, 37; இவர் ஈரோடு மாவட்டம் சிவகிரியில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில் செவிலியராக பணிபுரிந்தார். தம்பதிக்கு, 13 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். நேற்று காலை வீட்டில் இருந்த ராதிகா, திடீரென மயங்கி விழுந்தார். காங்கேயம் அரசு தலைமை மருத்துவ-மணைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சாவுக்கான காரணம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பயணிகளுக்கு அச்சுறுத்தல்வடமாநில ஆசாமி கைது

ஈரோடு: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண் ஷா, 40; கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். ஈரோடு ரயில்வே பிளாட்பார்ம் எண்.1ல் நேற்று காலை அமர்ந்திருந்தார். பயணிகளை அச்சு-றுத்தும் வகையில் செயல்பட்டார். தகவலறிந்து சென்ற ஈரோடு ரயில்வே போலீஸ் ஏட்டு குரு-சாமி, அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தி-யுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த அருண்ஷா, தகாத வார்த்தை பேசி ஏட்டுவை பணி செய்ய விடாமல் தாக்கியுள்ளார். இதனால் ரயில்வே போலீசார், அருண்ஷாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் வழக்-குப்பதிந்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்-படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். ஈரோட்டுக்கு அருண்ஷா வேலை தேடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

ஈங்கூரில் கஞ்சா நடமாட்டம் ஜோர்கட்டுப்படுத்த வலியுறுத்தி முறையீடு

ஈரோடு: பெருந்துறை தாலுகா ஈங்கூர் முன்னாள் பஞ்., தலைவர் மற்றும் மக்கள் சேவை இயக்க தலை-வரான சண்முகம் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறிய-தாவது:

சென்னிமலை யூனியன் ஈங்கூர் கிராமத்தில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்க-ளான கஞ்சா அதிகமாக விற்பனையாகிறது. பல்-வேறு பகுதிகளில் பணி செய்து வரும் தொழிலா-ளர்கள், அவர்களை சந்திக்க வருவது போல வரும் நபர்களால் நடமாட்டம் அதிகரிக்கிறது. இவற்றை தடுக்க வேண்டும். ஈங்கூர் பஞ்.,ல் வரி இழப்பு ஏற்படும் வகையில் அங்கீகாரம் இல்லாத கட்ட-டங்கள், குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இவற்றை முழுமையாக அளவீடு செய்தும், ஆய்வு செய்து, உண்மை நிலையை அறிந்து நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுக-ளுக்கு முன் குடிநீருக்காக டெபாசிட் செலுத்தி, இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

பெண்ணை அரிவாளால் வெட்டிய'மப்பு' பாட்டி மீது வழக்குப்பதிவு

பவானி: ஆப்பக்கூடல் புதுப்பாளையம் மல்லிகை நகரை சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தா, 41; கட்டட தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்-தம்மாள், 75, 'டிவி' பார்க்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோவிந்தம்மாள் தகாத வார்த்தை பேசியுள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் கட்டிலில் படுத்து சாந்தா துாங்கி கொண்டிருந்தார். அப்-போது குடிபோதையில் அரிவாளுடன் வந்த கோவிந்தம்மாள், சாந்தாவை வெட்டியுள்ளார். வலியால் அவர் சத்தமிடவே அவரது மகன்கள் ஓடிவந்து அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ-னைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்டார். புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார், பாட்டி கோவிந்தம்மாள் மீது வழக்குப்பதிவு செய்-துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us