/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கோலாகலம்
/
ஈரோடு மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கோலாகலம்
ADDED : ஜன 17, 2026 04:45 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று மாட்டு பொங்கல் விழா கோலாக-லமாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு நகரில் வசிக்கும் விவசாயிகள் தங்களுடைய காளை, பசு மாடுகளை நீர்நிலைகளுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டினர். பின் கொம்புகளில், வர்ணங்கள் தீட்டி புதிய மாலைகள், மணிக-ளுடன் அலங்கரித்தனர். இதேபோல் ஏர் கலப்பை, மண்வெட்டி உள்பட பொருள்களை கழுவி சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்தனர். பின்னர் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபட்-டனர்.
தொடர்ந்து மாட்டு கொட்டகையில் சாணத்தால் தெப்பம் கட்டி, அதில் பாலை ஊற்றி வழிபட்டனர். பின்பு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, பழம் ஊட்டி மகிழ்ந்தனர். இதேபோல் கோசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்து மாட்டு பொங்கலை கொண்டாடினர்.
* பவானி சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் ஆடு, மாடு-களை தண்ணீர் ஊற்றி, குளிப்பாட்டி, புது கயிறுகள் கட்டி, மண்-பானையில் பொங்கல் வைத்து, கால்நடைகளை வழிபாடு செய்-தனர்.
* புன்செய்புளியம்பட்டி, பனையம்பள்ளி, மாதம்பாளையம், காவிலிபாளையம், நொச்சிக்குட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்-பட்ட கிராமங்களில் உள்ள, மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, சிறப்பு பூஜை செய்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். கிராமங்களில், பல்வேறு இசை மற்றும் கலா-சார, பாரம்பரிய போட்டிகளை நடத்தினர். பொதுநல சங்கம் சார்பில் நடந்த மாட்டு பொங்கல் விழாவில் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், கபடி, கோலப்போட்டி, நடனம் உள்பட பல்-வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. கிராமங்-களில் மக்கள், குழுக்களாக குலவை ஒலி எழுப்பி பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு படையலிட்டு, கரும்பு உடைத்தும், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆடியும் மாட்டு பொங்கலை கொண்டாடினர்.
* கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை என்ற இடத்தில் செல்லும் தடப்பள்ளி பாசன வாய்க்காலில், கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு, எருமைகளை குளிப்பாட்டினர். பின் அதன் கொம்புகளுக்கு பெயின்ட் அடித்து, மூக்கணாங்கயிறு, தலைக்கயிறு, கழுத்து கயிறு உள்ளிட்டவைகளை கட்டி, மாடு-களை அலங்கரித்து, மாட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

