ADDED : பிப் 28, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி
போலீஸ் ஸ்டேசன் எல்லை பகுதியில், 2017ல் நடந்த சாலை விபத்து வழக்கு
மற்றும் சிறுவலுார் போலீஸ் ஸ்டேசன் எல்லை பகுதியில், 2018ல் நடந்த சாலை
விபத்துக்கான வழக்கு விசாரணை, கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில்
நடக்கிறது.
இரு வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், விசாரணை
அதிகாரியான அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம்
ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி விஜய் அழகிரி, இன்ஸ்பெக்டர்
பாலமுரளிசுந்தரத்தை, மார்ச், 12ல் ஆஜராக வாரண்ட் பிறப்பித்து
உத்தரவிட்டார்.

