/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3 லட்சம் தராமல் இழுத்தடிப்பதாக புகார்
/
ரூ.3 லட்சம் தராமல் இழுத்தடிப்பதாக புகார்
ADDED : நவ 14, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மொடக்குறிச்சி அருகே எழுமாத்துார், மண்கரடு சர்ச் வீதியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் சந்திரசேகர், 50; வெள்ளோடு போலீசில் இவர் அளித்த மனுவில் கூறி-யிருப்பதாவது: பெருந்துறை, ஆர்.எஸ்.சென்னிமலை பாளை-யத்தை சேர்ந்த ஜகவர் என்பவருக்கு, 16 லட்சம் ரூபாயில் வீடு கட்டி கொடுத்தேன். இதில், 13 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டார். மீதி பணத்தை கொடுக்காமல் தாமதப்படுத்துகிறார்.
மோசடி செய்யும் நோக்கில் அவரது நடவடிக்கை உள்ளது. விசா-ரணை நடத்தி, பணத்தை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு புகாரில்
தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், ஜவகர் மீது வெள்ளோடு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

