/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேப்பர் அரைக்கும் மில் மீது புகார்
/
பேப்பர் அரைக்கும் மில் மீது புகார்
ADDED : நவ 23, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா, முள்ளம்பட்டி அடுத்த எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் உட்பட சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும்,
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்கிய மனுவில் கூறியதாவது:முள்ளம்பட்டி பஞ்., எம்.புதுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பேப்பர் அரைக்கும் தனியார் மில் இயங்குகிறது. இங்கிருந்து துர்-நாற்றம், புகை அதிகமாக வருவதால் கண் எரிச்சல், சுவாச கோளாறு, தலைவலி போன்ற உபாதை ஏற்படுகிறது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

