/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 10, 2024 01:59 AM
ஈரோடு;பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த தொழிலாளர்கள், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார்.
செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாமவட்ட அமைப்பாளர் தம்பிகலையான் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை ஒப்பந்த தொழிலாளர் கணக்கில் சேர்க்க வேண்டும். நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

