/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றின் குறுக்கே பாலம்: ரூ.21 கோடியில் திட்ட வரைவு தாக்கல்
/
பவானி ஆற்றின் குறுக்கே பாலம்: ரூ.21 கோடியில் திட்ட வரைவு தாக்கல்
பவானி ஆற்றின் குறுக்கே பாலம்: ரூ.21 கோடியில் திட்ட வரைவு தாக்கல்
பவானி ஆற்றின் குறுக்கே பாலம்: ரூ.21 கோடியில் திட்ட வரைவு தாக்கல்
ADDED : நவ 17, 2024 02:25 AM
ஈரோடு, நவ. 17-
கோபி அருகே, நஞ்சை புளியம்பட்டியில் பவானி ஆற்றின் குறுக்கே, 21 கோடி ரூபாயில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், புதிய பாலம் கட்ட, திட்ட வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
கோபி அருகே, நஞ்சை புளியம்பட்டியில், பவானி ஆற்றின் குறுக்கே மக்கள் செல்வதற்காக கடந்த, 1931ல் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம், பவானி-சத்தியமங்கலம் சாலையையும், கோபி-ஈரோடு சாலையையும் இணைக்கும்படி உள்ளது. இந்த பாலம், தடப்பள்ளி-
அரக்கன்கோட்டை பாசன நிலங்களை இணைக்கிறது. இப்பாலம்
கட்டிய காலத்தில், போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப, 4.80 மீட்டர் அகலத்தில் பாலத்தை அமைத்துள்ளனர்.
தற்போது ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லும் அகலத்தில் உள்ளதால், அடிக்கடி வாகன நெரிசல், விபத்து ஏற்படுகிறது. எனவே இப்பாலத்துக்கு மாற்றாக, பவானி ஆற்றின் குறுக்கே போதிய அகலத்துடன், புதிய உயர்மட்டப்பாலம் அமைக்க வேண்டும், என அப்பகுதியினர் கோரி வருகின்றனர். இதுபற்றி, பவானி ஆறு, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தார். இந்நிலையில், இப்பாலம் அமைக்க திட்ட வரைவு அனுப்பி உள்ளனர்.
இதுபற்றி, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:
இப்பாலம், 94 ஆண்டுகள் பழமையானது. இருப்பினும் வலுவாக உள்ளது. தற்போதைய நிலையில் போக்குவரத்துக்கு போதுமான அகலமில்லை. எனவே விரைவில் அதன் அருகே புதிய பாலம் கட்ட உள்ளோம். இதற்காக, 21 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட வரைவு அறிக்கை தயாரித்து, கடந்த வாரம் அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
அரசின் நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். அதன்பின், நிதி ஒதுக்கீடு பெற்று, டெண்டர் விடப்பட்டதும், பாலம் கட்டும் பணி துவங்கும். புதிய பாலம் கட்ட, நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2016ல் பாலம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், இதுவரை மூன்று முறை மதிப்பீடு திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், விரைவில் அரசு அனுமதி பெற்று, பாலம்
கட்டப்படும்.
இவ்வாறு கூறினர்.

