/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரதான சாலையில் பைக் சாகசத்தால் அச்சம்
/
பிரதான சாலையில் பைக் சாகசத்தால் அச்சம்
ADDED : டிச 23, 2025 08:23 AM

ஈரோடு: ஈரோட்டில், பெருந்துறை சாலையில், நேற்று முன்தினம் மாலை, வாலிபர்கள் சிலர் பைக் கில் சாகசம் செய்தபடி (வீலிங்) சென்றனர். பைக் கில் அதிக சத்தம் வருமாறு செய்து சிலர் ஓட்டி சென்றனர். சிலர் பிற வாகன ஓட்டிகளை அச்சு-றுத்தும் விதமாக பறந்தனர்.
ஈரோடுகோவை பிரதான சாலையில் வாகன போக்குவரத்து உள்ள நிலையில் பைக்கில் வாலிபர்கள் சாகசம் செய்தது, பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இதை பிற வாகன ஓட்டிகள் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதி-விட்டுள்ளனர். வாலிபர்கள் சென்ற பெரும்பாலான பைக்குகளில் பதிவெண் இல்லை. மோட்டார் வாகன சட்ட பிரிவுகளுக்கு எதி-ராக விபத்தை ஏற்படுத்தும் வகையில் சென்ற வாலிபர்கள் மீது, போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஞாயிறு போன்று விடுமுறை நாட்களில் மாலை வேளைகளில் நெடுஞ்சாலை ரோந்து மற்றும் பைக் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற சாகச அத்து-மீறல்களில் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

