ADDED : நவ 29, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீடி தொழிலாளர்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு, நவ. 29-
ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், வீரப்பன்சத்திரத்தில் மாவட்ட தலைவர் சித்தாரா பேகம்
தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்தியாவில், 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் உள்ளனர். பீடி தொழிலில் வசூலிக்கும், 28 சதவீத ஜி.எஸ்.டி., தொகையில் இருந்து பீடி தொழிலாளர் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வீடு கட்ட மானியத்துடன் கடன், நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். பீடி தொழிலாளர் ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். சட்டப்
படியான கூலி, பஞ்சப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

