/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நத்தம் நிறுத்த பட்டா பிரச்னைக்கு கிராமம் வாரியாக மனு பெறப்படும்'
/
'நத்தம் நிறுத்த பட்டா பிரச்னைக்கு கிராமம் வாரியாக மனு பெறப்படும்'
'நத்தம் நிறுத்த பட்டா பிரச்னைக்கு கிராமம் வாரியாக மனு பெறப்படும்'
'நத்தம் நிறுத்த பட்டா பிரச்னைக்கு கிராமம் வாரியாக மனு பெறப்படும்'
ADDED : நவ 30, 2024 01:19 AM
ஈரோடு, நவ. 30-
ஈரோட்டில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு:
தமிழக விவசாயிகள் சங்கம் பெரியசாமி: அனைத்து கிராமம், நகரங்களிலும் வருவாய் துறை ஆவணங்களில் நத்தம் நிறுத்தம் என உள்ளதால், அந்நிலத்தை எந்த பயன்பாட்டுக்கும் மாற்ற முடியவில்லை. இதனை மாற்ற விண்ணப்பித்து, 4 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார்: இப்பிரச்னை அனைத்து பகுதியிலும் உள்ளது. நத்தம் நிறுத்தம் பட்டா சரி செய்து பெற, கடந்த மாதங்களில் முகாம் நடத்தியபோது, மக்களிடம் வரவேற்பு இல்லை. அவர்களுக்கு, பிரச்னை எழும்போது விண்ணப்பிக்கின்றனர்.
இருப்பினும், வரும் மாதம் முதல் குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு கிராமமாக முகாம் நடத்தி, நத்தம் நிறுத்தம் விண்ணப்பம் பெற்று சரி செய்து தரப்படும். இதுபற்றி, அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் குறிப்பிட்ட தேதியை மக்களிடம் தெரிவிப்பார்கள்.
கலெக்டர்: மக்கள் சாசனம் தயாரித்து, மாவட்ட வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்திலும் உள்ளது. இதை பார்வையிட்டு, தங்களது கருத்து, தேவையான விபரம் பற்றி தெரிவிக்கலாம். அதன் பின், இறுதி வடிவம் கொடுத்து வெளியிடலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

