/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணைக்காத தீக்குச்சி உயிரை பறித்தது
/
அணைக்காத தீக்குச்சி உயிரை பறித்தது
ADDED : நவ 05, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணைக்காத தீக்குச்சி
உயிரை பறித்தது
பெருந்துறை, நவ. 5--
பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம், கணபதிபாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து, 55; திருமணம் ஆகாதவர். குடிபோதைக்கு அடிமையாகி, சில நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார். நேற்று பீடியை பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை அணைக்காமல் கீழே போட்டார். அங்கு கிடந்த துணியில் தீப்பிடித்து, கட்டிலில் படுத்திருந்த காளிமுத்து உடலிலும் பற்றியது. இதனால் அவர் கூக்குரலிடவே, வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைத்து, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலையில் இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

