/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை தன்னிச்சையாக நிரப்பியதால் அ.தி.மு.க.,வினர் முற்றுகை
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை தன்னிச்சையாக நிரப்பியதால் அ.தி.மு.க.,வினர் முற்றுகை
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை தன்னிச்சையாக நிரப்பியதால் அ.தி.மு.க.,வினர் முற்றுகை
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை தன்னிச்சையாக நிரப்பியதால் அ.தி.மு.க.,வினர் முற்றுகை
ADDED : நவ 15, 2025 01:33 AM

ஈரோடு: ஈரோட்டில், எஸ்.ஐ.ஆர்., படிவங்களை தன்னிச்சையாக நிரப்பியதால், பி.எல்.ஏ.,க்களை அ.தி.மு.க.,வினர் மற்றும் மக்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு மாநகராட்சி, 51வது வார்டு, பாகம் எண் - 214, 215க்குட்பட்ட மணல்மேடு பகுதியில் பி.எல்.ஏ.,க்கள், எஸ்.ஐ.ஆர்.,க்கான படிவங்களை சில நாட்களாக வழங்கி வந்தனர்.
மணல்மேடு குடிசைப்பகுதியில் டேபிள், சேர் போட்டு வாக்காளர்களை நேற்று வரவழைத்து படிவங்களை நிரப்பியுள்ளனர்.
'டெத், ஷிப்டேடு, அன்-டிரேசபிள், ஆப்சென்ட்' என, 4 வகையில் படிவங்களை வழங்காமல், பென்சிலில் அவர்களாகவே எழுதிக்கொண்டு, வாக்காளர்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அ.தி.மு.க.,வினர் சேர்ந்து பி.எல்.ஓ.,க்களிடம், 'வீடுவீடாக சென்றுதான் படிவம் வழங்க வேண்டும்.
அவ்வாறு செல்லாமல் தன்னிச்சையாக நிரப்பக்கூடாது' என, வாக்குவாதம் செய்தனர்.
இதை ஊடகங்கள் படம் எடுத்ததுடன், மக்களும் வீடியோ எடுத்தனர். இதனால் படிவங்களை டேபிளில் போட்டுவிட்டு, அதிகாரிகள் அவரவர் வண்டியில் புறப்பட்டு சென்றனர். 154வது பாகத்துக்கான அலுவலர்கள் பொதுமக்களிடம் பேசி, சமாதானம் செய்ததை தொடர்ந்து போலீசாரும் வந்தனர்.
அங்கிருந்த டேபிள், சேரை, பக்கத்தில் இருந்து ஒரு கட்டடத்துக்குள் எடுத்து சென்றனர்.
டேபிளில் இருந்த படிவங்களை, பிற பாகத்துக்கான அதிகாரிகள் வந்து கைப்பற்றி சென்றனர்.

