/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒப்பந்ததாரர், பொறியாளரை விளாசிய கூடுதல் கலெக்டர்
/
ஒப்பந்ததாரர், பொறியாளரை விளாசிய கூடுதல் கலெக்டர்
ADDED : நவ 13, 2024 03:14 AM
பவானி:அம்மாபேட்டையில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட, யூனியன் அலுவலக கட்டடத்தை, காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அங்கு நடந்த நிகழ்வில் கூடுதல் கலெக்டர் சதீஷ் கலந்து கொண்டார். ஒவ்வொரு அறையாக ஆய்வு மேற்கொண்ட நிலையில், அலுவலக பணியாளர் அறைக்கு சென்றார். அங்கு ஆவணங்கள் வைக்க அமைக்கப்பட்ட இடத்தில், சிமெண்ட் கலவையால் 'ஸ்லாப்' அமைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஒப்பந்ததரார் சேது வெங்கட்ராமனிடம், கடப்பா கல்லில் 'சிலாப்' அமைக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.மேலும், கட்டடத்தில் நிறைய குறை இருப்பதாக சுட்டிக்காட்டிய சதீஷ், யூனியன் இன்ஜினியர்கள் கட்டட பணிகளை ஆய்வு செய்வதில்லை என்று சாடினார். ஆண்கள் கழிப்பறையில் பெயிண்ட் சரிவர அடிக்கவில்லை; பினிசிங்கும் சரியாக இல்லை என்று, அரசு இன்ஜினியரை கடிந்து கொண்டார். ஒரு கட்டத்தில் மிக கோபமானவர், இப்படி வேலை செய்தால், சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்றும் எச்சரித்தார்.

