/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
/
பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்
ADDED : டிச 16, 2024 03:47 AM
பவானி: பவானியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 8ம் தேதி நடந்தது. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே, பவானி அந்தியூர் பிரிவிலிருந்து சங்கமேஸ்வரர் கோவில் வரை, தி.மு.க., - அதிமுக., - பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்-டன. கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வாரமாகியும், 10க்கும் மேற்-பட்ட இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது.
பவானி போலீசார் அறிவுறுத்தியதில், பா.ம.க.,வினர் மட்டும் அகற்றியுள்ளனர். பிற கட்சியினர் பேனர்களை அகற்றவில்லை என தெரிகிறது. குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், எதிரில் பேனர்கள் அகற்றப்படாதது, கட்சியினரின் விதி-மீறலின் உச்சக்கட்டம். ஏதாவது விபத்து நேரிடும் முன் பிளக்ஸ்-களை போலீசார், தயவு தாட்சண்யம் பாராமல் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.