தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருமையுடன்செயல்பட்டு வரும்ஈரோடு தனியார் சட்டக்கல்லுாரி

பெருமையுடன்செயல்பட்டு வரும்ஈரோடு தனியார் சட்டக்கல்லுாரி

பெருமையுடன்செயல்பட்டு வரும்ஈரோடு தனியார் சட்டக்கல்லுாரி


ADDED : ஏப் 30, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு சட்டக் கல்லுாரி தலைவர் சிந்து ரவிச்சந்திரன் கூறியதாவது: ஈரோட் டின் முதல் தனியார் சட்டக்கல்லுாரியாக ஈரோடு சட்டக் கல்லுாரி, 2022-23ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு தரமான சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, 5 ஆண்டு B.A.LL.B. படிப்பும், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்களுக்காக, 3 ஆண்டு கால LL.B. படிப்பும் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா, 60 இடங்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்லுாரி, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இடங்களை முழுமையாக பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது. 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அதேபோல், ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லுாரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2024--25 கல்வியாண்டில் கோபிசெட்டிபாளையத்தில் மகளிருக்காக தொடங்கப்பட்ட இக்கல்லுாரி இந்தியன் நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி பெற்று பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்காக 4 ஆண்டு கால B.Sc Nursing பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. படிப்பை முடித்தவுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, துபாய் போன்ற வெளிநாடுகளில் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us