/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிவேக ஜீப் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி
/
அதிவேக ஜீப் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி
ADDED : பிப் 28, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:பவானியை
அடுத்த ஜம்பை, பழநி ஆண்டவர் கோயில் வீதியை சேர்ந்தவர் இர்ஷத் அகமது,
42; பெருந்துறை தனியார் காஸ் சிலிண்டர் வினியோக கம்பெனி ஊழியர். நேற்று
காலை, 10:30 மணியளவில், பவானியில் இருந்து ஹீரோ ஹோண்டா பைக்கில்,
பெருந்துறைக்கு வேலைக்கு சென்றார்.
சித்தோடு-ஆட்டையம்பாளையம்
அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே
அதிவேகமாக வந்த ஜீப் நிலை தடுமாறி, டூவீலர் மீது மோதியது. இதில்
இர்ஷத் அகமது பலத்த காயமடைந்தார். ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜீப்பை ஒட்டி வந்த கேரளாவை சேர்ந்த
ஆதில் ரகுமான் என்பவரை, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

